சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியை மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உச்சத்தில் இருந்தபோது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் தொடர் முயற்சி மற்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்தது. தற்போது மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மீண்டும் மேற்கொள்ள உள்ளனர்.
இப்பணிக்காக வார்டு 2 பேர் வீதம் 100 வார்டுகளுக்கு 200 பேர் இப்பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது