• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது

March 25, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் அடுத்த வாரம் நடத்த திட்டமிப்பட்டுள்ளது. இதற்கான தேதியை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் அடுத்த வாரம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியின் மொத்த வருவாய் மற்றும் செலவினம் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் வரி வருவாயில் இருந்து எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று தெரியவரும்.

இதேபோல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க