• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

January 27, 2022 தண்டோரா குழு

கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த விலை உயர்த்த டிவி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

கோவை மாதம்பட்டி அடுத்த செல்லப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் இவரது மகன் ஹரிபிரசாத், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறது. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தரமும் தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் முன்கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் ஹரிபிரசாத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மாலை வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த சோனி டிவி மற்றும் 2 பவுன் நகை 15 ஆயிரம் ரொக்கம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பேரூர் காவல்போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயவியல் துறையினர் பீரோ கதவு போன்ற இடங்களில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க