April 16, 2020
தண்டோரா குழு
கோவை மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கோவையை பொறுத்தவரையில் 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக அசோகன் பணியாற்றி வந்தார்.இந்தநிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மருத்துவமனையில் கம்யூனிட்டி மெடிசன் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு பணி முடிந்த பிறகு இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுத்த சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து கட்டுப்பாடுகளும் அரசு மருத்துவமனை டீனின் கீழ் இருந்தன.இது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
டீன் அசோகன் 2 மாதத்தில் ஒய்வு பெற இருந்த நிலையில் தற்போது திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கொரோனா வைரஸ் காலத்தில் மாற்றப்பட்ட 3-வது மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.