May 2, 2018
தண்டோரா குழு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதி கோவை மத்திய சிறையில், மின்விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மத்திய சிறையில் சீனிவாசன் என்ற கைதி,சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.ஈரோட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு இருந்தார்.இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் சிறையில் இருந்த மின் விசிறியில், அவரது லுங்கியால் தூக்கிட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.சிறைத்துறை காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.