March 24, 2020
தண்டோரா குழு
கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறையில் கூட்டத்தை குறைக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.