March 2, 2018
தண்டோரா குழு
கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களின் இரு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சிணையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரது மகன் கார்த்திகேயன்.ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இராண்டாமாண்டு பயின்று வரும் இவர்,தனது புல்லட் வாகனத்தில் நேற்றிரவு மதுக்கரை பகுதியில் சென்றுள்ளார்.அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கரை முஸ்லீம் காலணியை சேர்ந்த ஜாகீர் மற்றும் அன்வர் ஆகியோர் மீது புல்லட் வாகனம் மோதியுள்ளது.இதையடுத்து மாணவர் கார்த்திகேயன் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க 500 ரூபாய் பணத்தை அவ்விருவரிடமும் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு கார்த்திகேயனை செல்போனில் அழைத்த ஜாகீர் தனது இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்க மேலும் பணம் வேண்டும் எனவும் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.தொடர்ந்து அவ்விருவரும் தனது மற்றொரு நண்பரான சாதிக்கை அழைத்து கொண்டு கார்த்திகேயனை சந்திக்க சென்றபோது கார்த்திக் தனது நண்பர்காளான பெருமாள், அஜீத் ஆகிய இருவருடன் நின்றுள்ளார்.அப்போது பணம் கேட்ட நிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.பின்னர் கார்த்திக் உள்ளிட்ட மூவரையும் தாக்கிய வாலிபர்களை தடுக்க வந்த கார்த்திக்கின் தாய் சங்கீதாவையும் தாக்கியுள்ளனர்.
மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகையையும் பறித்ததாக கூறப்படுகிறது.இது குறித்த தகவல் பரவிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்,தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை பாலக்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் மதுக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.அதே வேளையில் அங்கிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் மற்றொரு தரப்பினரும் திராண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.எனினும் தாக்கியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி பொதுமக்கள் அங்கேயே காத்திருந்த சூழலில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளார் மூர்த்தி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் வேறு பகுதியில் மற்றொரு தரப்பினர் போராட்டத்திற்கு தயாராவதாக தகவல் பரவியதால் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கோவையின் எல்லயோர பகுதிகள் முழுவதிலும் விடிய விடிய காவல்துறையினர் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.