• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

June 23, 2025 தண்டோரா குழு

கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை காளப்பட்டி சாலையில் கெட்டிமேளம் அரங்கில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் செயலாளர் நாகேந்திர குமார் வரவேற்று பேசினார். தலைமை உரை தலைவர் ராஜதுரை தலைமை தாங்கி உரையாற்றினார்.

2025-27 ஆம் ஆண்டின் தலைவராக பொறியாளர் வி பி பழனிச்சாமி அவர்களும் துணைத் தலைவராக பொறியாளர் வி.கே. தாமோதரசாமி அவர்களும் செயலாளராக பொறியாளர் எம் செந்தில்நாதன் அவர்களும் பொருளாளராக பொறியாளர் ஜி சுந்தர்ராஜன் அவர்களும் மற்றும் அலுவலக நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் தலைமை விருந்தினராக பொறியாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம் எல் ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பொறியாளர் கே.விஸ்வநாதன்,உடனடி முன்னாள் தலைவர்,அகில இந்திய கட்டுநர் சங்கம் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.காவேரி குழுமம்
ஜே.எம்.டி வினோத் சிங் ரத்தோர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

புதிய தலைவர் பொறியாளர் விபி பழனிச்சாமி உரையாற்றுகையில் சங்கப் பொறியாளர் நலன் சார்ந்த தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்துதல், மாதிரி மதிப்பீடு வழங்குதல், உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகள், மற்றும் கட்டிட தொழிலாளர்களை அரசு நல வாரியத்தில் இணைத்தல் என நடப்பாண்டிற்கான செயல் திட்டங்களை அறிவித்தார்.

மேலும் இவ்விழாவில் உடனடி முன்னாள் தலைவர் தலைவர் பொறியாளர் ஜி பி ஜெயவேல், தற்போதைய தலைவர் பொறியாளர் ஆர்.ராஜதுரை தற்போதைய செயலாளர் பொறியாளர் எஸ்.நாகேந்திர குமார் பொருளாளர் தற்போதைய பொறியாளர் ஜி.சீனிவாசன் இணைச் செயலாளர் பொறியாளர் சி.ஆர்.ஸ்ரீ பிரசன்ன ராஜா இணை பொருளாளர் பொறியாளர் பி.மகுடேஸ்வரன் மக்கள் தொடர்பு அலுவலர் பொறியாளர் பி குமரேசன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பொறியாளர் எம்.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க