• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.39 கோடிக்கு மது விற்பனை !

May 8, 2020 தண்டோரா குழு

கோவை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில்
ரூ.39 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி,காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது.நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கி மகிழ்ச்சியாக சென்றனர்.பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்த நிலையில் முதல் நாளிலேயே ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில்
அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 39 கோடியும் மது விற்பனையாகியுள்ளது.

கோவை மண்டலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 39 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 125 ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதில்
கோவை மாவட்டத்தில் மட்டும் 16 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 915 ரூபாய்க்கு மது விற்பனையும்,திருப்பூரில் 11கோடியே 86 லட்சத்து 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கு மது விற்பனையும் ஈரோடு மாவட்டத்தில் 8கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 870 ரூபாய்க்கு மது விற்பனையும்
நீலகிரி மாவட்டத்தில் 2கோடியே 88லட்சத்து 61ஆயிரத்து 420 ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை மது விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க