January 15, 2021
தண்டோரா குழு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பட்டு சேலை,வேஷ்டி,சட்டையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ராமநாராயணன் மகன் ராம நாராயணன் முரளி என்கிற ராமசாமி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சங்கத்தின் தயாரிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதலாம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பொங்கல் பரிசாக பட்டு சேலை வேட்டி சட்டை மற்றும் பொங்கல் வைப்பதற்கான நெய் அரிசி முந்திரி திராட்சை வெல்லம் உட்பட அனைத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசாக வழங்க அவர் முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில்,கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை ஈரோடு நீலகிரி திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 52 பேருக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கும் விழா ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ட்ரீம் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் அஜ்மீர் சாகுல் தலைமையில் நடைபெற்ற இதில், சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நேரு நகர் நந்து,பிக் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மார்டின் புரொடக்சன்ஸ் பெஞ்சமின், ஸ்ரீ பண்ணாரி அம்மன் புரொடக்சன்ஸ் கே எஸ் அக்சய் பெரிய நாயகி அம்மன் கிரியேஷன்ஸ் கேஎல் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் பொங்கல் தொகுப்புகளை பெற்றுக் கொண்டனர்.