January 5, 2026
தண்டோரா குழு
கோவை மணியகாரம்பாளையம் 19வது வார்டு பகுதி மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவை மாநகர் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் கோவை மணியகாரம்பாளையம் பகுதி 19வது வார்டில் பகுதி கழகச் செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், வட்டக் கழக செயலாளர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை பிரிவின் குமார் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜானகி ஸ்டாலின் சம்பத், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஜோதி ஆகியோரின் முன்னிலையில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், பி.எல்.ஏ 2 நிர்வாகிகள் சாந்தி, டேவிட், ஜேக்கப், ரங்கசாமி, பகுதி கழக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, தொண்டரணி அமைப்பாளர் ரஷீதா பேகம் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி தொண்டர் அணி, மகளிர் அணி துணை அமைப்பாளர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பி.எல். ஏ 2 நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.