May 1, 2020
தண்டோரா குழு
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.
கோவையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.அதனடிப்படையில் உணவு வழங்குவது,வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பொதுமக்களுக்கு 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளரும்,கோவை மக்கள் சேவை மையத்தின் தலைவருமான வானதி சீனிவாசன் ஆலோசனையின் பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கோவை மருத்துவ கல்லூரியின் முன்னாள் டீன் இந்திரா ப்ரனேஷ் தொடங்கி வைத்தார்.மாஸ்க்குகள் அனைத்தும் கோவையில் தேவையுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.