April 1, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியின் தரம் உயர்ந்து, இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவார் கமலஹாசன் நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசனுக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம் மேற்கொண்டார்.கோவை அம்மன்குளம் பகுதியில் கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் , டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
கமலஹாசன் சினிமாவில் நடிக்கும்போது கூட உயிரை கொடுத்து நடிப்பார் என தெரிவித்த அவர், ஒரு மனிதனுடைய சிறப்பு ,அவருடைய வேலையில் அவர் காட்டும் நாணயத்தில் இருக்கிறது எனவும், அப்படிப்பட்டவர் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதியின் தரம் உயர்ந்து, இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவார் என தெரிவித்தார்.
நேர்மையானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும்,கோவை மக்கள் சிந்திக்க கூடியவர்கள் யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள் என தெரிவித்தார்.நேர்மை என்ற வார்த்தையை மக்கள் நீதி மட்டும் தான் தைரியமாக சொல்லும் எனவும் பிரச்சாரத்தின் போது ஸ்ரீ பிரியா தெரிவித்தார்.