• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் – காவல் துறை அறிவுறுத்தல்

August 25, 2020 தண்டோரா குழு

சமீப காலமாக பல்வேறு மோசடி நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடுவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீப காலமாக பல்வேறு மோசடி நபர்கள் பொதுமக்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு (குறிப்பிட்ட சில கம்பெனி பெயர்களை சொல்லி) இங்க இருந்து பேசுகிறோம். satellite மற்றும் google mapல் பார்த்த பொழுது உங்களது வீடு / இடம் செல்போன் டவர் அமைப்பதற்கு ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீங்கள் எங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் உங்களது இடத்தில் / வீட்டில் நாங்கள் செல்போன் டவர் அமைத்துக் கொள்வோம். அதற்கு மாதம்தோறும் கணிசமான தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம் கார்டு எண் ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

அதேபோல், சில மோசடி பேர்வழிகள் தங்களை இராணுவ வீரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் வட மாநிலத்திற்கு மாறுதலாகி செல்ல உள்ளதால் தனது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக OLX சமூக வலைதளத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, மேற்படி வாகனங்களை வாங்க விரும்பி அவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடம் நம்பும்படியாக பேசி முன்பணமாக சிறு தொகையை கூகுள் பே மூலம் அனுப்பி வையுங்கள். மீதமுள்ள தொகையை வாகனத்தை நீங்கள் எடுத்துக்கொண்ட பின் கொடுத்தால் போதும் என நம்பும்படி பேசி பணத்தை பெற்று மோசடி செய்து வருவதாக கூறினர்.

மேலும், OLX சமூக வலைதளத்தில் தான் விமான நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும் சுங்கத்துறையில் வேலை செய்து வருவதாகவும், தன்னிடம் விலை உயர்ந்த வெளிநாட்டு செல்போன்கள் குறைந்த விலைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு அதனால் ஈர்க்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது பணத்தை ஆன்லைனில் அனுப்பி விடுங்கள், செல்போன் உங்கள் விலாசத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுகிறேன் என நம்பும்படியாக பேசி பணத்தை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

அதேபோல, சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கிக்கணக்கு எண் ஏ.டி.எம் கார்டு எண் இரகசியக் குறியீடு ஆகியவற்றை சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு வழங்க இயலும் என கூறி விபரங்களை பெற்று அவ்வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் உள்ளது.
ஆகவே, இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க