• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ப்ரோ ஜோன் மாலில் மாபெரும் உணவு திருவிழா 2023 துவக்கம் !

May 19, 2023 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோ ஜோன் மாலில் மாபெரும் உணவு திருவிழா 2023 வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

இந்த உணவுத் திருவிழா வெள்ளி,சனி,ஞாயிறு (19, 20, 21) ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இந்த உணவுத் திருவிழாவில் தென்னிந்திய,வட இந்திய, சைனீஸ், தந்தூரி, சைவ மற்றும் அசைவ உணவு வகைகளுக்காக 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு திருவிழாவை முன்னிட்டு, சம்மர் ஹோலிக் 2003 கிராண்ட் பைனல் எனும் பெயரில் பாட்டுப் போட்டி, நடன போட்டி, மற்றும் பேஷன் ஷோ ஆகியவற்றிக்கான இறுதி போட்டிகள் இந்த மூன்று நாட்கள் நடைபெறுகிறது.மேலும்,குழந்தைகளுக்கு பிரத்யேகமாக விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த உணவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அப் டவுன் கன்பிட்டி மற்றும் புட்லூஸ் நிறுவனம் செய்திருந்தது.நிகழ்ச்சியில் ப்ரோசோன் மால் நிறுவனத்தின் சார்பாக தலைமை மேலாளர் நிர்வாகம் மற்றும் பைனான்ஸ் அதிகாரி பாபு, மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி பிரின்ஸ்டீன் நாதன், ஆப்ரேஷன் தலைமை அதிகாரி முஜாமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க