December 11, 2021
தண்டோரா குழு
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான படம்பேச்சுலர்.கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.
இந்தநிலையில்,இப்படக்குழுவினர் கோவையில் உள்ள பல்வேறு திரையங்குகளுக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறுகையில்,
இப்படம் என் நண்பரின் வாழ்வில் நடந்த நிஜமான கதையாகும்.தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் எதிர்பார்த்ததைவட ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனக்கு மேலும் ஊக்கம் அளித்து உள்ளது. என்னை நம்பி வாய்ப்பளித்த படத்தின் தயாரிப்பாளருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
படத்தின் நாயகி திவ்யபாரதி கூறும்போது,
அறிமுக திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நகர்ப்புற மட்டுமல்லாமல் கிராமப்புற கதாபாத்திரம் கிடைத்தாலும் எடுத்து நடிப்பேன் என்றார்.