• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போலீஸ் அருங்காட்சியகத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் விசிட் !

January 24, 2020

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை அரசு பள்ளி மாணவர்கள் இன்று பார்வையிட்டு சென்றனர்.

கோவை ரயில் நிலையம் எதிரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நாள்தோறும் மக்கள் வருகை புரிந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று கோவை ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளி, கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஐசிசி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் போலீஸ் அருங்காட்சியாகத்திற்கு வருகை புரிந்தனர். இதில் 84 மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்களும் உடன் வந்திருந்தனர். அவர்கள் போலீசார் அருங்காட்சியகத்தை மிகவும் வியப்புடன் பார்வையிட்டு சென்றனர்.

இது குறித்து ஆசிரியை மேகன்சுபா,

பல நூற்றாண்டு முதல் இருந்த போலீஸ் உடைகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருந்தன. போலீசாரின் பணிகள் குறித்து நிறைய விஷங்கள் தெரிந்தன. கண்டிப்பாக நிறைய பள்ளி மாணவர்கள் இதை காணவேண்டும் இதன் மூலம் நிறைய அனுபவங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.

இது குறித்து ஆசிரியர் சுரேஷ் குமார் கூறுகையில்,

கோவையில் உள்ள முக்கியமான இடங்களை மாணவர்கள் அறியவேண்டும் இன்று நாங்கள் பல இடங்களுக்கு சென்றோம். அதன் ஒரு பகுதியாக போலீஸ் குறித்து மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இங்கு வந்தோம். காவல் துறை பணிக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இங்கு வந்து பார்த்தால் அவர்கள் மனதில் ஒரு உத்வேகம் உண்டாகும். காவல்துறையினரின் பணிகள் மற்றும் பயன்படுத்தும் கருவிகள் போன்றவற்றை உண்மையாக பார்த்து உணருக்கிறார்கள் என்றார்.

மாணவர்கள் மகபூப் சுபாணி கூறும்போது,

போலீஸ் அருங்காட்சியத்தை இதுவரை பார்த்ததில்லை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன். எனக்கு பிடித்த மிலிட்டரி டாங்கி இருத்தது. நான் என்சிசி மாணவர் என்பதால் நிறைய போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்களை பார்த்தேன் அது வியப்பாக இருந்தது. அதுமன்றி போலீசாரின் பல வரலாறுகள், மற்றும் வழக்குகள் குறித்தும் அறிந்தேன் என்றார்.

மேலும் படிக்க