• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போக்குவரத்து பயிற்சிப் பூங்காவின் 5-வது ஆண்டு விழா கொண்டாட்டம் !

January 12, 2022 தண்டோரா குழு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் பழக்கவழங்கங்களை ஊக்குவிக்கும் வகையில், கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பயிற்சிப் பூங்காவின் 5-வது ஆண்டு விழாவை கோயம்புத்தூர் நகர காவல் துறையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டும் இணைந்து கொண்டாடின. கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், கோயம்புத்தூர் மாநகர காவல் துறையுடன் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் முதலாவது போக்குவரத்து பயிற்சிப் பூங்காவைத் தொடங்கியது. சிறு-நகர கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் போக்குவரத்து சிக்னல்கள், ஜீப்ரா கிராஸிங்குகள், வேகத்தடைகள் போன்றவற்றை உள்ளடக்கி உண்மையான சாலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது.

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் அனைத்து வயதினருக்குமான அன்றாடப் பயிற்சிகளை வழங்கி வருகிறது ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியர் இதன் மூலமாக, இதுவரை கோயம்புத்தூரைச் சேர்ந்த 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் (1.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் புதிதாக, ஏற்கனவே வாகனமோட்டும் வழக்கம் கொண்ட 87,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்) பயனடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள போக்குவரத்து பயிற்சிப் பூங்காவின் தாக்கம் குறித்து கோவை மாநகர, காவல் ஆணையர், பிரதீப் குமார் கூறுகையில்,

“போக்குவரத்து பூங்காவை பார்வையிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்; கோயம்புத்தூர் மாநகர காவல் துறையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டும் இணைந்து இதனை நன்றாகப் பராமரித்து வருகின்றன. இதே புத்துணர்வுடன் இந்த செயல்பாடுகள் தொடர வேண்டும். கோயம்புத்தூர் மாநகரத்தில் மிகச்சிறப்பாக சாலை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில் காவல் துறை முக்கியப் பங்கு வகிக்குமென்று உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பிராண்ட் அண்டு கம்யூனிகேஷன் பிரிவு மூத்த துணைத் தலைவர் பிரபு நாகராஜ் பேசுகையில்,

“ஹெச்எம்எஸ்ஐயைப் பொறுத்தவரை, அனைத்து வயதினரிடமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்குவதற்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும். 2017 ஜனவரி மாதம் கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் உதவியுடன் கோவையில் போக்குவரத்து பயிற்சி பூங்கா திட்டத்தைத் தொடங்கினோம். இன்று, கோவை பாலசுந்தரம் சாலையில் அமைந்த இந்த போக்குவரத்து பயிற்சிப் பூங்காவின் மூலமாக 2.3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

எதிர்கால வாகன ஓட்டுநர்களான 5 வயது குழந்தைகள் முதல் வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் வரை அனைவரும் இதில் அடங்குவர்; புதிதாக வாகனமோட்டும் பெண்கள் சுதந்திரமான பயணர்களாக உணரும் வகையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. புதிய இயல்புநிலைக்கு மாறும் வகையில், ஹோண்டா சாலை பாதுகாப்பு இ-குருகுலம் எனும் டிஜிட்டல் திட்டம் வழியாக ஆரோக்கியமான சாலை பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடரவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு விஷயத்தில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் சிஎஸ்ஆர் பிரிவு உறுதிப்பாடு:

உலகளவில் சாலை பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கிறது ஹோண்டா. தனது கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வைப் பூர்த்தி செய்யும் வகையில், 2001 முதல் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டி வருகிறது ஹெச்எம்எஸ்ஐ. ஹெச்எம்எஸ்ஐயின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டமானது 42 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களைச் சென்றடைந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 10 போக்குவரத்து பூங்காக்கள், 7 பாதுகாப்பாக வாகனமோட்ட கற்றுத்தரும் மையங்களில் திறன்மிக்க பாதுகாப்பு வழிகாட்டுநர் குழுக்களின் கீழ் தினசரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருக்கும் ஹெச்எம்எஸ்ஐயின் 1,000-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்பி வருகின்றன. ஹெச்எம்எஸ்ஐயின் தனியுரிம மெய்நிகர் வாகனமோட்டும் தூண்டி வாகனமோட்டுகளின் முன் – கணிப்பு திறனை அதிகப்படுத்துகிறது அதேநேரத்தில், இந்தியா முழுவதுமுள்ள இதன் டீலர்ஷிப்களில் புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை வழங்குவதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், புதிய இயல்புநிலையிலும் இந்த விழிப்புணர்வுக் கற்றல் நிற்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவற்காகவே ‘ஹோண்டா சாலை பாதுகாப்பு இ-குருகுலம்’ எனும் டிஜிட்டல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது ஹெச்எம்எஸ்ஐ. 2020ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது முதல் இத்திட்டம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை விழிப்புணர்வுமிக்க, பொறுப்புள்ள சாலைப் பயனர்களாக மாற்றியிருக்கிறது.

மேலும் படிக்க