• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

December 20, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜ பெருமானை வணங்கி பரவசமடைந்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அன்று முதல் தொடர்ந்து 9 நாட்கள் காலை மாலை வேளைகளில் திருவெம்பாவை உற்சவம், மாணிக்க வாசகர் வீதி உலா, கிளி வாகன சேவை மற்றும் சோமாஸ்கந்தர் திருவீதி உலா உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அருள்மிகு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அருள்மிகு நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு சிறப்பாக காட்சி அளிக்கவே இரவு முதலே இந்த காட்சிக்காக காத்திருந்த ஏராளமான பக்தர்கள் எம்பெருமானை பக்தி பரவசத்துடன் துதித்து சென்றனர்.

மேலும் படிக்க