• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் ஆதின வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

January 12, 2023 தண்டோரா குழு

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோவை பேரூர் ஆதின வளாகத்தில் இந்து,இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்த சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அதன் படி கோவை பேரூர் ஆதின வளாகத்தில் பேரூராதினம் மருதாசல அடிகளாருடன் இணைந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நடைபெற்றது.இதில் இஸ்லாமிய மதரசாவில் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க