• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் பவுண்டரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

December 6, 2018 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் பவுண்டரிகழிவு புகையால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் பவுண்டரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கேஸ் கம்பெனி பகுதியில் புவனேஸ்வரி நகர், விவேகானந்தா நகர்,ஸ்ரீதேவி நகர்,அண்ணாமலையார் கார்டன்,உட்பட 8க்கு மேற்பட்ட நகர்களில் சுமார் 5000 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.இங்கு உள்ள தனியார் பவுண்டரி கம்பெனியில் இருந்து இரும்பு தாது உருக்கும் கரும்புகை,மண்,துகள்கள் அருகில் இருக்கும் வீடுகளில் வந்து விழுவதாக கூறப்படுகிறது.இதனால்குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இதனால் இன்று காலை அப்பகுதியை சார்ந்த 100 க்கு மேற்பட்டோர் கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து கம்பெனி பொறுப்பாளர் விக்டர் என்பவர் கூறுகையில்,

1973 ல் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியில் சுற்று சூழல் பாதுகாப்புக்கு ரூ3.50 கோடி செலவில் நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாசுகட்டுப்பாடு இயக்கத்துடன் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.25 மி.கி மேல் துகள்கள் வந்தால் சென்னை மையத்தில் அலாரம் அடிக்கும் வசதி உள்ளது.அதனால் மாசு பெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் சிறிதளவு புகை 10. மீட்டர் உயரத்தில் உள்ள புகை போக்கி மூலம் வெளியேற்றப்படுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க