March 15, 2018
தண்டோரா குழு
கோவை பெரியதடாகம் அருகே 10 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வேட்டைதடுப்பு காவலர்கள் மீட்டு இன்று(மார்ச் 15)அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
கோவை பெரியதடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள 10 அடி உயர தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க இன்று அதிகாலை இரு குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது.அதில் பிறந்து 1 மாதமே மாத யானை குட்டி தீடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.குட்டியானையை மீட்க முடியாமல் தாய் யானை பிளிறியது. சத்தம் கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மற்ற யானைகள் வனத்துறையினரை குட்டியானையின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்தன. எனினும் மற்ற யானைகளை விரட்டிவிட்டு ஜே.சி.பி இயந்திர உதவியுடன் தண்ணீர் தொட்டியில் இருந்து யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் யானைகுட்டியை அதன் கூட்டத்துடன் சேர்த்து வனத்துக்குள் அனுப்பி வைத்தனர்.