July 5, 2018
இந்தியாவில் முதல் முறையாக துவங்கப்பட்ட கோவை பூச்சியியல் அருங்காட்சியகத்தை பார்வையிட ஆன்லைன் டிக்கட் முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை சார்பில் பல்கலை வளாகத்தில் பூச்சியியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூச்சி இனங்கள்,ஒட்டுண்ணிகள் பற்றிய அறிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்துள்ளனர்.அதற்காக கட்டணமாக 50 ரூபாயும், மாணவர்கள் அடையாள அட்டையுடன் வந்தால் 30 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.
மேலும்,ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை விடுமுறை தினமாக உள்ளது.பொதுமக்கள் வசதிக்காக ஆன்லைன் முறையில் டிக்கட் கட்டணம் செலுத்தும் முறை தற்போது அறிமுகம் செய்து உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வருவதால், இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.http://tnau.ac.in/insect_museum/index.html என்ற பல்கலை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.