• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புத்தக கண்காட்சி துவங்கியது

July 19, 2019

கொடிசியா மற்றும் ‘பபாசி’ இணைந்து நடத்தும், புத்தக கண்காட்சி, கொடிசியா வணிக வளாகத்தில் துவங்கியது.

இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன

இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இலக்கியம், ஆன்மிகம், வரலாறு, சுயமுன்னேற்ற நுால்கள் என, லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் வாசிப்புக்கு காத்திருக்கின்றன. பலர் குழந்தைகளை அழைத்து கொண்டு குடும்பத்துடன், கண்காட்சிக்கு வந்திருந்தனர்.

கண்காட்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்த வாசகி பேசுகையில்,

தான்பொதுவாக எல்லாப் புத்தகங்களும் படிப்பதாகவும், தற்போது குழந்தைகளுக்கு உகந்த புத்தகங்களை வாங்குவதே வழக்கமாகிவிட்டதாகவும், குறிப்பாக குழந்தைகள் இது போன்று கண்காட்சிகளுக்கு அழைத்து வருவதால் அவர்களிடம் வாசிப்பு திறனை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர் கூறுகையில்,

தற்போது நவீன காலங்களில் இளைய தலைமுறையினர் இணையதளத்தின் பல்வேறு பரிணாமங்களில் பயணித்து வருகின்றனர்.எக்காலத்திற்கும் ஏற்ற புத்தகங்களை படிப்பதன் அவசியத்தை குறிப்பாக இந்த தலைமுறையினர் இது போன்ற கண்காட்சிக்கு வந்து தெரிந்து கொள்ள வேண்டும். இணையதளங்கள் வாசிப்பில் எந்த வசதிகள் மற்றும் தகவல்கள் கொடுத்தாலும் அதில் நம்மகத்தன்மைகள் குறைவாகவே உள்ளன.ஆனால் புத்தகங்கள் அறிவு வளர்ச்சியின் சான்றாக இருப்பதே எந்த காலத்திலும் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளது என்றார்.

இது குறித்து புத்தக பதிப்பாளர் பேசுகையில்,

புத்தக விற்பனை வணிகம் சில நேரங்களில் தொய்வை சந்தித்தாலும், இது போன்ற கண்காட்சிகள் புத்தக வாசிப்பின் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சியில்,பள்ளி மற்றும் கல்லுாரி மணவர்கள், அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். தன்னம்பிக்கை, ஆன்மிகம், இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழலியல் சார்ந்த நுால்களை, அதிகம் விரும்பி வாங்கினர்.

மேலும் படிக்க