• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

May 31, 2018 தண்டோரா குழு

கோவையில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

பின்னர் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும் மாணவர்களும் கையெழுத்திட்டனர்.இந்த கையெழுத்து இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகையிலைக்கு எதிராக கையெழுத்திட்டனர்.மேலும் மருத்துவ மாணவர்கள் புகையிலை ஒழிப்பு குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.

மேலும் படிக்க