• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

October 10, 2022 தண்டோரா குழு

மார்பக புற்றுநோயானது பெண்களிடையே அடிக்கடி கண்டறியப்படும் புற்றுநோயாகும். மேலும் இவ்வகை புற்றுநோய் மரணத்திற்கான காரணங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7,34,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

2040 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் புதிதாக கண்டறியப்படும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களிடையே அதிக மார்பக புற்றுநோய்களை நாம் காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

50 சதவீதத்திற்கும் அதிகமான புற்றுநோய்கள் மேம்பட்ட நிலைகளில் கண்டறியப்படுகின்றன. இவ்வாறான புற்றுநோய்கள் முன்னமே கண்டறியப்பட்டால் 50-80 சதவிகிதம் உயிர் பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்க முடியும். இது தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தின் மீது உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. ஆகவே புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் இவ்வாறான நெருக்கடிகளை குறைக்கலாம்.

தொண்ணூறாம் ஆண்டுகளில் இருந்து அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் இளஞ்சிவப்பு நிற ரிப்பென்களை ஏந்திக்கொண்டு மார்பக ஆரோக்கியத்தை பற்றியும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் கூருவதால் இதனை ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கின்றோம்.

இதனை அனுசரிக்கும் வகையில் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி மற்றும் பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இணைந்து 2022 ஆம் ஆண்டின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை, அக்டோபர் 10 ஆம் தேதி பி.எஸ்ஜி மைதானத்தில் மனித பிங்க் ரிப்பன் இணைப்பை டாக்டர் ஏ. ஜெயசுதா, முதல்வர், பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி அவர்களின் தலைமையின் கீழ் நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள், நர்சிங் மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து மார்பக புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்பினர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனித பிங்க் ரிப்பனை உருவாக்கினர்.

மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிமுறைகளையும் தேவையான ஆதரவையும் பெற உறுதிசெய்தனர்.

மேலும் படிக்க