August 24, 2021
தண்டோரா குழு
மருத்துவமனை வளாகத்தினுள் தொற்று தடுப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பை மையப்படுத்தி இந்த திட்டத்தை சர்வேதச இணை ஆணையம் (ஜேசிஐ) உருவாக்கியது.
மருத்துவ நிறுவனங்களுக்குள் நோயாளிகளின் பாதுகாப்பின் அவசியத்தை கோவிட் தொற்று கோடிட்டு காட்டியுள்ளது. இதன் விளைவாக, மருத்துவமனைகளுக்குள் பாதுகாப்பான மருத்துவ முறைகளை மையமாக வைத்து,”தொற்றிலிருந்து பாதுகாப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் சிகிச்சையில் ஏற்படும் மருத்துவ தவறுகள்” (பிரைம்) என்ற திட்டத்தை சர்வேதச இணை ஆணையம் (ஜேசிஐ), பெக்டன் டிக்கின்சன், உதவியுடன் உருவாக்கியுள்ளது.
சர்வேதச அளவில் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள பெக்டன் டிக்கின்சன் நிறுவனம், இந்தியாவில் வெற்றிகரமாக தனது முதல் சுற்று திட்டத்தை முடித்துள்ளது. முதல் சுற்றில், 13 பெறும் நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முதன்மையான சிறப்பு வாய்ந்த மருத்துவமனைகள் இடம் பெற்றன.
இந்த திட்டம் எவ்வாறு மருத்துவமனைகக்கு உதவியது என்பது பற்றி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் ஜெ.எஸ் புவனேஸ்வரன் பேசும்போது,
“ஜேசி பிரைம் திட்டம், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களையும்,மருத்துவ பயிற்சி முறைகளையும் அளித்தது,எங்களது மருத்துவ பயிற்சி முறையில் முக்கியத்துவமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. சர்வதேச தரமிக்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் உணர்வு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
தெற்காசிய ஃ இந்திய பெக்டன் டிக்கின்சன், நிர்வாக இயக்குனர் பவன் மோச்சர்லா பேசுகையில்,
“120 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பெக்டன் டிக்கின்சன், மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பேருதவியாக இருந்து வந்துள்ளது. எங்களது தயாரிப்புகள், சேவைகள் மற்றும் கொள்திறனால், புதிய பல புதுமையான தொழிலில் நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துதலில் முன்னணியில் உள்ளோம். மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதனால், நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட, முடிவுகள், பொருளாதார திறன் மற்றும் முறைகளை பெற முடிகிறது. நாடு முழுவதும் உள்ள பல மருத்துவ வசதிகள், சர்வேதச தரத்திற்கு உயர்வதோடு, நோயாளிகள் விரைவில் குணமடையவும், பாதுகாப்பை உயர்த்துதோடு, மருத்துவ சிகிச்சை முறையில் சிக்கனமும் ஏற்படுகிறது.
இந்த தங்கநிகர் தர நிர்ணய பாதுகாப்பு திட்டத்தை (பிரைம்), ஜேசிஐ உடன் பெக்டன் டிக்கின்சன், இணைந்து உருவாக்கியது. தரத்தை நிர்ணயிக்கும் இந்த திட்டத்தால், நாடு முழுவதும் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதோடு, ஏற்படவிருந்த சிக்கல்களையும் தவிர்க்க பெக்டன் டிக்கின்சன், உதவியுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பான பயணப்பாதுகாப்பிற்கு, இணைந்து செயலாற்றும் இந்த திட்டம், ஒரு மிக முக்கிய மைல் கல்லை ஏற்படுத்தியுள்ளது என நம்புகிறோம். இந்த திட்டத்தில் பங்கேற்று நிறைவு பெற்ற மருத்துவமனைகளுக்கு வாழ்த்துக்கள். இவைகளுக்கு, நோயாளிகளின் பாதுகாப்பிற்கும் கவனிப்பிற்கும் ஜெசிஐ – பிரைம் சான்றளிக்கப்படுகிறது,” என்றார்.
சவாலான தொற்று காலத்திலும், ஜெசிஐ – பெக்டன் டிக்கின்சன், இணைந்து, மெய்நிகர் காணொளி வாயிலாக, மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனைகள், நிர்வாகம் மற்றும் பணியாளர்களுக்கு திட்டங்களையும் பயிற்சிகளையும் அளித்து, சிறப்பான மேம்பாட்டினை மேற்கொண்டது.
ஜெசிஐ, பெக்டன் டிக்கின்சன்-யுடன் பங்குதாராக தொடரும் பிரைம் திட்டம் பற்றி ஜெசிஐ சர்வேதச ஆலோசனை சேவையின் துணைத்தலைவர் டாக்டர் மார்வா ஜெ. ஜோடி பேசுகையில்,
“மோசமான நிலையிலிருந்து பாதுகாப்பான நிலைக்கு திரும்ப மருத்துவ சிகிச்சையை நிர்வகிப்பது சர்வேதச அளவில் உயர்ந்த தரத்தில் தயார்படுத்த வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் எங்களது பங்குதாரர்கள் அளித்த நேர்மறையான பின்னூட்டங்கள் ஊக்கமளிப்பதாக இருந்தது. தொற்று காலத்தின்போது, மருத்துவமனைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவற்றுடன் மெய்நிகர் காணொளியில் அவ்வப்போது தேவையான பாதுகாப்பு தகவல்களை அளித்து வந்தோம். தற்போதுள்ள ஜெசிஐ அளித்த தர நிர்ணயம், அதை பிரதிபலித்தது. மருத்துவமனைகள் இதில் காட்டிய ஆர்வம், எங்களை ஊக்கப்படுத்தியது. மேலும், பல மருத்துவமனைகளில் இந்த பிரைம் திட்டத்தில் இணைய அழைக்கிறோம்,” என்றார்.