• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கேம்பிரிட்ஜ் ஆங்கில தேர்வு மையம் துவக்கம்

November 8, 2019 தண்டோரா குழு

பள்ளி கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்த்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கேம்பிரிட்ஜ் ஆங்கில தேர்வு மையம் துவங்கப்பட்டது.

கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதில் ஆங்கில மொழி திறன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை பயிலும் போதே ஊக்குவிக்கும் விதமாக கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையான கேம்பிரிட்ஜ் ஆங்கில தேர்வு மையம் துவங்கப்பட்டது. துவக்க விழாவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபிகிருஷ்ணன்,மைய தேர்வு மேலாளர் டாக்டர் சுரேஷ்குமார், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர், டாக்டர் கே. பிரகாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டு ஆங்கிலத்தின் தெற்காசியாவின் பிராந்திய இயக்குநர்
டி.கே.அருணாச்சலம்,

மாணவர்களின் கல்வி மற்றும் வேலைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது. இந்த மையத்தில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் தகவல் தொடர்பு திறன் உள்ளிட்ட பல்வேறு ஆங்கில மொழி தொடர்பான பயிற்சிகள் அளித்து சர்வதேச சான்றிதழை வழங்க உள்ளோம். கேம்பிரிட்ஜ் ஆங்கில தேர்வுகள் மூலம் பெறப்படும் சான்றிதழ்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக மேலை நாடு செல்லும் மாணவ,மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார்.

மேலும் படிக்க