• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி குழுமம் சார்பில் நடைபெற்ற காதம்பரி இசைக் கச்சேரி விழா

January 6, 2020

கோவை பி.எஸ்.ஜி குழுமம் சார்பில் நடைபெற்ற காதம்பரி இசைக் கச்சேரி விழாவில் பல்வேறு இசைகள் இடம் பெற்றிருந்தன.

கோவை பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு இசைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் காதம்பரி இசைக்கச்சேரி திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

3-வது நாளாக இன்று நடைபெற்ற இசைக் கச்சேரி விழாவில், பி.எஸ். ஜி கல்லூரியில் சிறந்த பரதநாட்டியக் கலைஞர்கள் 15 பேரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷமகார கண்ணன் என்ற பாடலுக்கு பி.எஸ்.ஜி கல்லூரி மாணவி சவுந்தர்யா செங்கதிர், கிருஷ்ணர் வேடமிட்டு நடனமாடினார். இந்த நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து, இசைக் கதம்பம் எனும் பெயரில், கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.இதில் குறையொன்றும் இல்லை கண்ணா, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடினார்.

மேலும் படிக்க