• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது

May 12, 2022 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,2021-22ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்விக் குழுவினால், ஸ்வச்தா செயல் திட்டத்தை செயல்படுத்தி, நிலையான மற்றும் பசுமையான நடைமுறைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முன் முயற்சிகளை மேற்கொண்டதற்காக மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை, பல்லுயிர், திறமையான கழிவு உற்பத்தி மற்றும் வளாகத்தில் அகற்றும் நடைமுறைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி கவுன்சில் தலைவர் டாக்டர் டபிள்யூ ஜி பிரசன்ன குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கினர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியன் செயலாளர் கண்ணையன் மற்றும் முதல்வர் பிருந்தா ஆகியோர் விருதினை பெற்றனர். இதில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க