• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நாளை உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்

September 28, 2022 தண்டோரா குழு

சுதந்திர இந்தியாவுடன் 1947 முதல் பயணித்து வரும் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி (75 வருடங்கள்) தனது பவள விழாக் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் துறை சார்பாக உலக சுற்றுலா தினம் 29.09.2022 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் D. பிருந்தா வரவேற்புரை ஆற்றுகிறார். PSG அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் L. கோபாலகிருஷ்ணன் விழா தலைமையேற்கிறார்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் Dr. M. மதிவேந்தன் சிறப்புரையாற்றி,சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கல்வி மேம்பாட்டிற்கு வித்திட்டவர்களுக்குச் சிறப்புச் செய்கிறார். மேலும் சுற்றுலா தினப் போட்டிகளில் வென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார். மேலும் விருந்தோம்பல் துறை மாணவர்களால் நடத்தப்படும் “Let’s Tour” கல்லூரி வளாக நிறுவனத்தைத் துவக்கிவைக்கின்றார்.

இறுதியாக துறைத் தலைவர் S. ஜெகதீசன் நன்றியுரை வழங்குகிறார். இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப்படிப்பு என 14000 மாணவர்களைக் கொண்ட பழமையான கல்லூரி PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது பெருமைக்கும், சிறப்பிற்கும் உரியதாகும்.

மேலும் படிக்க