• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

November 8, 2021 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவி சவுந்தர்யா செங்கதிரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, ஸ்ரீ பாலரிஷி பீடம் விஸ்வாசிரஸணி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். சவுந்தர்யா செங்கதிர், பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை எலக்ட்ரானிக் மீடியா பயின்று வருகிறார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியில் குரு மிருதுளா ராயிடம் பரதநாட்டியம் பயின்று வருகின்றார். அரங்கேற்ற நிகழ்ச்சியில் இவரின் பரதநாட்டியத்தில் பல்வேறு முகபாவனைகளை இவர் வெளிப்படுத்தினார்.முடிவில் நடன மாணவிகளை அனைவரும் பாராட்டி கவுரவித்தனர்.பரத நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க