கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதுகலை இளங்கலை உட்பட 2416 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது..விழாவில், கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் G.ரவி கலந்து கொண்டு 2019-ம் ஆண்டு மற்றும் முதுநிலை 2020 ஆம் கல்வியாண்டைச் சேர்ந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 46 மாணவிகளுக்கும், முதுநிலைப் பட்டம் பெற்ற 570 மாணவிகள் மற்றும் .1800 இளநிலை மாணவிகள் என மொத்தம் 2416 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர்,
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர்,பாரதியின் கனவு தற்போது நனவாகி வருவதாக குறிப்பிட்டார். கல்வி கற்பதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர், உலகின் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் இளம் தலைமுறை முக்கிய பங்கு வகிக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.
விழாவில்,புதிய பட்டதாரிகளின் உறுதிமொழியைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மீனா முன்மொழிந்தார். தொடர்ந்து,விழாவின் நிறைவாக கல்லூரியின் செயலர் டாக்டர் .யசோதா தேவி நன்றியுரை வழங்கினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்