• Download mobile app
01 Jan 2026, ThursdayEdition - 3613
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “அமிழ்தினி – தாய்மை பராமரிப்பு கிளினிக்” தொடக்கம் !

January 1, 2026 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பி பிளாக், OG OP – முதல் மாடியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் முழுமையான நலனை மையமாகக் கொண்டு அமிழ்தினி – தாய்மை பராமரிப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கிளினிக்கை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் கார்த்திகேயன்,மகளிர் நல மருத்துவத் துறை தலைவர் லதா மகேஸ்வரி, பி.எஸ்.ஜி.செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெய தீபா, பி.எஸ்.ஜி. பார்மசி கல்லூரி முதல்வர் இராமநாதன், மகளிர் நல மூத்த ஆலோசகர் சீதா பணிக்கர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சுபா ராவ், சமூக மருத்துவ நலத்துறை தலைவர் டாக்டர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் முழுமையான நலனை மையமாகக் கொண்டு அமிழ்தினி – தாய்மை பராமரிப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலத்துடன் மட்டுமல்லாமல், மன மற்றும் உணர்ச்சி நலத்திற்கும் முக்கியத்துவம் அளித்து சேவைகள் வழங்கப்படுகின்றன.

அமிழ்தினி – தாய்மை பராமரிப்பு கிளினிக்கில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்:

கர்ப்பகால ஆலோசனை (Antenatal Counselling) கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் மன மற்றும் உணர்ச்சி நல ஆதரவு,கர்ப்பகால கல்வி மற்றும் வழிகாட்டுதல், ஆரோக்கியமான தாய்மையை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்ப காலம் முதல் தாய்மையின் ஆரம்ப நிலை வரை பெண்களுக்கு தேவையான ஆலோசனைகள், அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய கல்வி மற்றும் ஆதரவு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுமாறு இந்த கிளினிக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமிழ்தினி – தாய்மை பராமரிப்பு கிளினிக் தொடக்கத்தின் மூலம், தாய்மை நலத்தை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த கர்ப்பகால மற்றும் தாய்மை அனுபவத்தை வழங்கவும் எங்கள் நிறுவனம் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 0422 458 7000

மேலும் படிக்க