• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் உறுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

November 27, 2019

இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி உடல் உறுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நவம்பர் 27ஆம் தேதி மத்திய சுகாதாரம்,மற்றும் குடும்ப நலத்துறையால் உடல் உறுப்பு தானம் நாளாக இன்று அனுசரிக்கப்பட்டு. தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இன்று 10வது இந்திய உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு கோவை பி எஸ்ஜி மருத்துவமனை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4பெட்டிகள் அடங்கிய உடல் உறுப்புகளை கோவை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும்,தொடர் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களுக்கு நன்றிகள் தெரிவிப்பதோடு மேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க