April 13, 2018
தண்டோரா குழு
கோவை பிஎஸ்ஜி அறநிலைய மாணவர் இல்லத்தின் சார்பில் தாய்/தந்தை அல்லது இருவரும் இல்லாத 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்பில் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு உணவு,தங்குமிடம்,சீருடை,மருத்துவ வசதி,எழுது பொருட்கள்,கணினிப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி என கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இவ்வாண்டும் மாணவர் விடுதியில் சேர விருப்பமுடையோர் செயலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து 28- 04-2018 மாலைக்குள் செயலர் அலுவகம்,PSG சர்வஜன மேல் நிலைப்பள்ளி,பீளமேடு,கோவை – 641 004 எனும் முகவரியில் ஒப்படைத்து 30-04-2018 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
தொலைபேசி எண் – 0422- 2572310,9944865628.