• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பார்க் தொழில்நுட்ப கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ZERO G – 25 நிகழ்ச்சி !

May 10, 2025 தண்டோரா குழு

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் பொறியியல் கல்லூரிகளான பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (PCET) பார்க் தொழில்நுட்ப கல்லூரிகளின் (PCT) இரண்டு நாள் கலை திருவிழாவான,ஆண்டு விழா 2025- ZERO G வெகு விமர்சையாக 09 மே 2025 மற்றும் 10 மே 2025 அன்று நடைபெற்றது.

இந்த கலைவிழாவில் 21 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்தனர். Project Expo, Short Film, Drawing, E Sports, Photography, Code Debugging, Code and Answer, Anime Quiz, Fashion Shop ad Cosplay, Singing, Mime, Reels Making போன்ற 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாள், திரைப்படத்துறையில் சாதித்து வரும் பின்னணி பாடகர்கள் ஆதித்யா RK மற்றும் ரேஷ்மா S கலந்து கொண்டு தங்களது குரல் வளத்தால் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

இரண்டாம் நாள் நிறைவு விழாவுக்கு பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr.அனுஷா ரவி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கமாண்டர் அரவிந்தன் RP (ஓய்வு), இந்திய கடற்படை மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கௌரவ விருந்தினராகவும், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

Dr.அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ZERO G குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நாம் இரண்டு ஆண்டுகளாக ராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி வரும் கல்வி கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்குமாறு கமாண்டர் அரவிந்தன் அவர்களை கேட்டுக் கொண்டு வெளியிட்டார்.

கமாண்டர் அரவிந்தன் தனது உரையின் போது,

கமாண்டர் அரவிந்தன் தற்போது உள்ள போர் சூழ்நிலையில் ராணுவ வீரர்களின் நிலைமைகளை விளக்கினார்.மேலும் அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் அவர்களை மதிக்குமாறும்,எல்லையில் நமது நாட்டைக் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் நலமுடன் திரும்பி வரவும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரியா வாரியா்ர உடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வு உற்சாகமாகவும் சுவையானதாகவும் அமைந்திருந்தது.இந்தக் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் இந்த கலை விழாவின் போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க