• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர ஆய்வு மாணவர்கள் போராட்டம்

December 5, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர ஆய்வு மாணவர்கள் கவன‌ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வி பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்பட்டது வந்தது. அதை கண்டித்து 2015 ஆண்டு முழுநேர பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். தொலைதூர முழுநேர ஆய்வு பி.எச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு கேட்டகிரி – பி என கொடுக்க வேண்டும் என்பதை வலுயுறுத்தியதை 2015 ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை
அவ்வாறு சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தொலைதூர பி.எச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் கேட்டகிரி – பி சான்றிதழ் எடுத்துவிட்டு ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க கவர்னரிடம் பரிந்துரை செய்ய இருப்பதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்தாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து இன்று முழு நேர ஆய்வு மாணவர்கள் சுமார் 70- க்கும மேற்பட்டவர் தரையில் அமர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க