• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

June 19, 2018 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 550 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு ஏற்கனவே வழங்கி வரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய உயர்வு அடிப்படையில் பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆனால் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படாத சூழலில் பாரதியார் பல்கலைக் கழக பொறுப்பாளரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான சுனில் பாலிவால் தலைமையில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.அப்போது அங்கு திரண்ட தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு தொடர்பாக உயர்கல்வி துறை செயலரிடம் முறையிட்டனர்.

ஆனால் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்கல்வித் துறை செயலர் கடந்த 2015ஆம் ஆண்டு ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் 25 சதவிகிதம் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக கூறினார்.ஆனால் அதனை ஏற்காத பணியாளர்கள் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்ற அரங்கின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே கூட்டம் முடிந்து வெளியே வந்த சுனில் பாலிவாலை முற்றுகையிட்ட பணியாளர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.அப்போதும் அவர்களை சந்திக்க மறுத்த உயர்கல்வித் துறைச் செயலர் தற்போது 25 சதவிகித ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும் எனவும் புதிய குழு ஒன்றை அமைத்து ஊதியத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியத்தில் முரண்பாடு இருப்பதாகவும்,அதனை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட புதிய ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையிலும் தவறுகள் இருப்பதால் அதனை செயல்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும்,இது தொடர்பாக பணியாளர் சங்க நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறினார்.பின்னர் பல்கலைக்கழக வளாகம் முன்பாக திரண்ட பணியாளர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை எனவும் பலகலைக்கழக பணியாளர் சங்கம் தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க