February 3, 2018
தண்டோரா குழு
பேராசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து வருபவர் கணபதி. இந்நிலையில், இவர் பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், எஞ்சிய ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் பெற்ற போது கணபதி கைதானார்.இதையடுத்து, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகத்திலும் கணபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.