February 5, 2018
தண்டோரா குழு
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களின் பணி நியமனங்களை ரத்து செய்ய கோரி பாரதியார் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று(பிப் 5) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பாரதியார் பல்கலைகழகத்தில் ஊழியர்களின் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பாகவே பாரதியார் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பினர் அரசு அதிகாரிகளிடமும் , அமைச்சர்களிடமும் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இந்நிலையில்,துணை வேந்தர் கணபதி கைது செய்தப்பட்டுள்ள நிலையில் , ஊழல் செய்து அவர் மூலம் பணிநியமனம் பெற்ற அனைவரின் பணிநியமனங்களை ரத்து செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு அந்த பணியை ஒதுக்க வலியுறித்தியும்,ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் , மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.