March 7, 2018
தண்டோரா குழு
கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.இதற்கிடையில் நேற்று இரவு திருப்பரத்தூரில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை சேதப்படுத்தினர்.
இந்நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை 4 மணிக்கு ஒரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் பாஜக அலுவகத்தில் இருந்து 50 அடிக்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பாஜக அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.