December 31, 2020
தண்டோரா குழு
உலக நன்மை வேண்டி பழனி மலை முருகனை வேண்டி கோவையிலிருந்து பழனி மலை வரை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதி வேக மோட்டார் பைக்குகளில் சென்று அசத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் .அனைத்து மக்களின் நன்மை கருதி பழனி மலை முருகனை வேண்டி . கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் அதி வேக திறன் கொண்ட பைக்குகளை ஓட்டியபடி கோவையிலிருந்து பழனி மலை வரை முருகனை தரிசிக்க ஊர்வலமாக சென்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவையிலிருந்து பழனி மலை வரை செல்லும் இந்த பெண்கள் முன்னதாக அனைத்துலக நன்மை வேண்டி கடந்த ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கோவையிலிருந்து பழனி முருகனை தரிசிக்க இரு சக்கர அதி வேக பைக்கில் கியர் அப் ரைடர்ஸ் பெண்கள் ஊர்வலமாக சென்றதை அனைவரும் பாராட்டினர்.