November 25, 2021
தண்டோரா குழு
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நேற்று நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.