November 18, 2021
தண்டோரா குழு
கோவையில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் மல்லிகை, ராமராஜ் சரண்யா ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு இச்சம்பவம் குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இன்று நடைபெறும் இந்த விசாரணையில் மாணவியின் பெற்றோர், மாணவி உடன் பயின்ற மாணவ மாணவியினர், பள்ளி நிர்வாகிகள், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.