August 16, 2025
தண்டோரா குழு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை ரிபப்ளிக் பன் மாலின் மைய அரங்கை இராணுவ வீரர்களின் சேவையை போற்றும் வகையில் ” Feel Like a Soldier ” எனும் நிகழ்வை நடத்தியது.
நிகழ்ச்சியில், மாணவர்கள் ராணுவம் போன்ற சவால்களை எதிர்கொண்டு தங்கள் உடல் மற்றும் மன உறுதியை சோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.” Feel Like a Soldier ” எனும் இந்த 3 நாள் நிகழ்வு , விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள மாணவர்களை நோக்கி நடைபெற்றது. இதில் முக்கிய அம்சங்களாக, ராணுவ நடைபயிற்சி போல டயர்களில் ஓடுதல், எடை தூக்கி தூரம் கடத்தும் சக்தி சவால், நெட்டில் கீழ் crawl ல் பயிற்சி, பாதுகாப்புடன் எடை தூக்கும் பயிற்சி, வேகம் மற்றும் எதிர்வினை சோதனை, உடல் சக்தி மற்றும் ஒருங்கிணைப்பு சவால், பாதுகாப்பான சூழலில் ஏர் ரைஃபிள் சுடுதல் போன்றவை நடத்தப்பட்டது.
1,000 மாணவர்கள் பங்கேற்கும் இலக்குடன், இந்த நிகழ்வு வீரம்,ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறது.ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் Mission Accomplished பதக்கம் மற்றும் சுதந்திர தின சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து பன் மால் தலைவர் பால சுப்பிரமணியன் கூறுகையில்,
சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில், மாணவர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்க விரும்புகிறோம்.இந்த நிகழ்வு , உடல் மற்றும் மன உறுதியை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பு.Mall- இல் இவ்வாறான தேசபக்தி சார்ந்த நிகழ்வை நடத்துவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்றார்.