• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் தேரை பாதுகாக்க போடப்பட்ட தகரம் சேதம்

May 30, 2018 தண்டோரா குழு

கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் கோவில் தேரை வெயிலில் இருந்து பாதுகாக்க பயன்படுத்திய தகரம் காற்றில் பறந்ததால் பக்தர்கள் பயந்து ஒட்டம் பிடித்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பங்குனித் திருவிழா மிக விமர்சையாக நடைப்பெற்றது.இவ்விழாவில் பட்டீஸ்வரர் தேரும்,பச்சை நாயகி அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தேர் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலில் காய்ந்தது.பக்தர்கள் கோவில் நிர்வகத்திடம் முறையிட்டதை தொடர்ந்து பச்சைநாயகி அம்மன் கோவில் தேரை சுற்றி மறைக்க தனியாருக்கு கடந்த வாரம் டென்டர் விடப்பட்டு அந்த வேலை நடைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று திடீரென காற்று வீசியதில் தேரை சுற்றி மறைக்கப்பட்ட தகடுகள் காற்றில் பறந்தது.இதை பார்த்த பக்தர்கள் பயத்தில் சிதறி ஓட்டம் பிடித்தனர்.உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தேரை சுற்றிலும் சுமார் 100 மீட்டருக்கு தடுப்பு அமைக்கப்பட்டு காற்றில் சிதலமடைந்த தேர் மறைப்பு தகடுகளை சரி செய்து வருகின்றனர்.

மேலும்,வெறும் கம்பிகளில் முறுக்கப்பட்டு உள்ளதால்,சரியான முறையில் வேலை செய்யாததே காரணம் எனவும் இதற்கு கோவில் நிர்வாகத்தின் அலச்சியமே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க