• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

November 24, 2018 தண்டோரா குழு

கோவை நீதிமன்ற பிராதன வாசலில் இளைஞரை மூன்று பேர் துரத்தி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக சில மணி நேரங்களிலேயே சம்பவத்திற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை சுங்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை டாஸ்மாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார்த்திக் கொலை முயற்சி வழக்கில் கைதான சூர்யா என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நிபந்தனையின் படி, கோவை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் காலை கையெழுத்திட சூர்யா கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, தேனீர் குடிக்க வெளியே வந்தபோது, நீதிமன்ற வாசலில் அடையாளம் தெரியாத நபர்களால் துரத்தப்பட்டு அரிவாள், கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் இருந்து தப்பிக்க சூர்யா, நீதிமன்ற எதிரில் இருந்த கடைக்குள் ஓடிபோய் ஒழிந்துக்கொண்டுள்ளார். இதனால், தலை, பின்னால் இடுப்பு பகுதியில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தில்லாமல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, அந்த சாலையில் உள்ள கடைகளில் மற்றும் காவல்துறையின் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர், சச்சின், பெலிக்ஸ்,தீபக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் சூர்யாவால் பாதிக்கப்பட்ட கார்த்திக்கின் நண்பர்கள் என தெரியவந்தது. பழிக்கு பழியாக தாக்குதல் நடத்தியதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பந்தைய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்த சூர்யா கடந்த 3நாட்களாக நீதிமன்றத்தில் கையெழுத்திட வரும்போது, துணையுடன் வந்துள்ளார். ஆனால், நேற்று சபரிமலைக்கு மாலை போட்டதால், தன்னை தாக்கமாட்டார்கள் என எண்ணி தனியாக வந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தென் மாவட்டங்களில் நீதிமன்ற வாசலில் தாக்குதல் நடைபெறும் நிலையில், கோவை வரலாற்றில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறையாகும்.

மேலும் படிக்க