• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்றம் பின்புறம் 2 இளைஞர்கள் மீது மர்மகும்பல் சரமாரி தாக்குதல் – கோவையில் பரபரப்பு

February 13, 2023 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸில் இரண்டு இளைஞர்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தில் இறந்தவர் பெயர் கோகுல் கீரநத்தம் பகுதியை சேர்ந்தவர் தலையில் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறுபவர் மனோஜ் சிவானந்த காலனி சேர்ந்தவர்.சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இளைஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக வந்ததாக கூறப்படும் நிலையில் இளைஞர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை காவல்துறை விசாரணைக்குப் பிறகே காயமடைந்தவர்கள் யார்? அவர்களை தாக்கியது யாராக இருக்கக் கூடும் என தெரியவரும்.ஒரு நிமிட நேரத்தில் கோவை நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க