October 23, 2020
தண்டோரா குழு
கோவையில் தமிழர்களின் கிராமிய கலைகளை தனது நாட்டுப்புற கலை பயிற்சி மையம் வாயிலாக மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் நாட்டுப்புற கலைஞருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
கோவையில் தமிழர்களின் கிராமிய கலைகளை தனது நாட்டுப்புற கலை பயிற்சி மையம் வாயிலாக மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் நாட்டுப்புற கலைஞர் கலையரசன் அவர்களுக்கு #GlobalCompact விருது எனும் உயர்ந்த அங்கீகாரத்தை ஐ.நா சபை வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சிறு வயதிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் ‘கிராமிய புதல்வன் விருது’ பெற்ற கலையரசன் அவர்களுக்கு, தமிழர்களின் கிராமிய கலைகளுக்காக இந்திய அளவில் முதன்முறையாக ஐ.நா சபையின் விருதை பெற்றமைக்காக என் அன்புமிகுந்த பாராட்டுகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.